March 12, 2018

லலிதா சஹஸ்ரநாமம் ( 233-240) ( With English Meanings)



சகுண உபாசனை

மஹா காமேஷ மஹிஷீ;
மஹா த்ரிபுர சுந்தரீ;
சது: ஷஷ்ட்யுப சா-ஆராத்யா;
சது: ஷஷ்டி கலா மயீ;
மஹா சது: ஷஷ்டி கோடி யோகினீ கணசேவிதா;
மனு வித்யா;
சந்த்ர வித்யா;
சந்த்ர மண்டல மத்யகா;

() மஹிஷீ = பட்டத்து மஹிஷீ - முதன்மை ராணி

#233 மஹா காமேஷ மஹிஷீ = மஹா காமேஷ்வரனின் ராணியாகப்பட்டவள்

() த்ரிபுரா = புரம் என்றால் நகரம் - பட்டணம். திரிபுரம் மூப்பெரும் நகரங்களைக் குறிக்கிறது. (ஸ்தூல, சூக்ஷும காரணங்களாலான மூவுலகங்கள் என்றும் பொருளுணரலாம்.)

#234 மஹா த்ரிபுர சுந்தரீ = மூவுலகிலும் அதி சௌந்தர்யத்துடன் சுந்தரியாக திகழ்பவள்

() ஷஷ்டி = அறுபது 
சது: சஷ்டி = அறுபத்தி நாலு
உபசார = உபசரிப்பு -  சேவை சாதித்தல் -  ஆபரண அலங்காரங்கள்
ஆராத்யா = வணங்குதல்

#235 சது: சஷ்ட்-யுபசாராத்யா = அறுபத்தி நான்கு விதமான பூஜா விதிகளால் ஆராதிக்கப்படுபவள் *

உபாசாரங்களில் வஸ்த்ர சமர்பணம், பூமாலை அல்லது பூக்கள் சமர்ப்பித்தல், தூப தீப ஆராதனைகள் முதலியவை அடக்கம்

() கலா-மயீ - கலைகளை உள்ளடக்கியவள்

#236 சது: ஷஷ்டி கலா-மயீ - அறுபத்தி-நான்கு கலாம்சமாக (கலைகளின் அம்சமாக) வியாபித்திருப்பவள்

() யோகினீ = யோகத்தில் ஈடுபடும் பெண்கள் - யோகத்தின் மூலம் இறைவனின் அருகாமையில் இருப்பவர்கள்
கண = அணிகள் - உப தெய்வங்களின் குழு
யோகினீ கண = உப தெய்வங்கள்
சேவிதா = சேவித்திருத்தல்

#237 மஹா சது: ஷஷ்டி கோடி யோகினீ கண சேவிதா = அறுபத்து நான்கு கோடி உப தேவதைகளால் தொழுதேத்தப்படுபவள்

#238 மனு வித்யா = மனுவினால் முன்னுரைக்கப்பட்ட ஸ்ரீவித்யா உபாசனையின் ஸ்ரீசக்கர வழிபாட்டு வடிவாக திகழ்பவள் *

#239 சந்த்ர வித்யா = சந்திரனால் விவரிக்கப்பட்ட ஸ்ரீ வித்யா உபாசனையின் ஸ்ரீசக்கர வழிபாட்டு முறைகளின் வடிவாக திகழ்பவள் *



வித்யா என்றால் ஞானம், அறிவு. ஸ்ரீவித்யா என்பது ஸ்ரீசக்கர வழிபாட்டு முறைகள், அதன் பாரம்பரியம், சம்பிரதாயம் விதிமுறைகள், அனுஷ்டானங்கள் முதலியன. இவ்வழிபாட்டினை மாமுனிகள்,தேவர்கள், கடவுளர்கள் உள்ளிட்ட பனிரெண்டு பேர்  விவரித்திருக்கின்றனர். அவர்கள் மனு, சந்திரன், குபேரன், லோபமுத்ரா, மன்மதன், அகஸ்த்ய மாமுனி, நந்திஷா, சூர்யன், விஷ்ணு, ஸ்கந்தன், ஶிவன் மற்றும் துர்வாஸ மாமுனி ஆகியோர் ஆவர்.


() மண்டலா = ப்ரதேசம் - வட்டாரம் - கண்டம் - வான்வெளி பிரதேசம் - கோள் சுற்று வீதி 

#240 சந்த்ர மண்டல மத்யகா = சந்திர மண்டலத்தின்(கோள் சுற்று வீதி) மத்தியில் வீற்றிருப்பவள்


சந்திரன் மனதை ஆட்சி செய்வதால், மனம் என்று அர்த்தப்படுத்திக் கொள்ளலாம். மனவோட்டத்தின் இறுதி அடைக்கலாமாக மன ஒருமைப்பாட்டின் உயர்ந்த எண்ணமாக மாயை வென்ற மனத்தில் நடுநாயகியாக அவள் வீற்றுப்பதாக உணரலாம். வேறு சிலர், சந்திர மண்டலத்தை சஹஸ்ராரத்துடன் ஒப்பிட்டு, அதன் மத்திய பகுதியான பிந்துவாக விளங்குகிறாள் என்று உணர்த்துகின்றன்ர்.

(தொடரும்)


Lalitha Sahasranama (233-240)


Saguna Upasana



Maha Kamesha Mahishi;
Maha Tripura Sundari;
Chathu: shastyupachaaaradhya;
chathu: sashti kalaa mayi;
Maha chathu: sashti Koti yogini gaNa sEvitha ;
Manu vidhya;
Chandra Vidhya;
Chandra Mandala Madhyaga;

() Mahishi = Principal Consort - Queen

#233 Maha Kamesha Mahishi = She who is the Queen of MahaKamesha (Shiva)

() Tripura = Pura means city or town. It is possible also to interpret as three tiers or realms of existences, i.w. gross, sutble and casual worlds.


#234 Maha Tripura Sundari = Who is the most beautiful woman in the Three worlds.



() Shasti = sixty 
chathu: shashti = sixty four
upachara = to serve - treat - decorations - ornaments 
aaradhya = worship

#235 Chathu: shastyupachaa-aradhya = Who is revered with sixty-four types of pooja rituals *

Upacharas includes symbolic offerings like clothes, flowers, incense etc

() kalaa-mayi = comprised of ART

#236 chathu: sashti kalaa mayi; = Who is permeated in sixty-four types of Art

() Yogini = women who are in union with god, in yoga
GaNa = gang or a group - Troop of demi-gods
Yogini-Gana = Demi-goddesses 
Sevitha = To be served


#237 Maha chathu: sashti Koti yogini-gaNa sEvitha = Who is glorified(served) by 64 crores demigodsses

#238 Manu Vidhya : Who personifies SriVidhya worship of Chakra as elucidated by Manu *

#239 Chandra Vidhya = Who personifies SriVidhya Worship of SriChakra and its tradition as discoursed by Chandradeva *

Vidhya is knowledge. Sri-Vidhya talks about worship, rituals and traditions pertaining to Sri-Chakra. Twelve Gods have expounded their school of thoughts on this subject. Manu and Chandra are two of them. Others include Kubera, Lopamudra, Manmatha, Agasthya, Nandisha, Surya, Vishnu, Skanda, Shiva and Durvasa.

() Mandala = region - zone or sector - orbit

#240 Chandra Mandala Madhyaga = She who seated in the centre of chandra-mandala (the orbit of moon) *


Since chandradeva or planet moon represents the mind and its orbit has impact on mind, it can also be interpreted that,  Devi lalitha is seated as the central 'point of focus' of mind (sans maya). There are other interpretations, relating Chandramandala to Sahasrara and she is being the central focus or the bindhu in sahasrara.


(to be continued)

Thanks reference and credit:

No comments:

Post a Comment