January 11, 2018

லலிதா சஹஸ்ரநாமம் (141-151) (with English meanings)





நிர்குண உபாசனை


ஶாந்தா ;

நிஷ்காமா;
நிருபப்லவா;
நித்யமுக்தா;
நிர்விகாரா;
நிஷ்ப்ரபஞ்சா;
நிராஷ்ரயா;
நித்யசுத்தா;
நித்யபுத்தா;
நிரவத்யா;
நிரந்தரா;


141 # ஶாந்தா = சாந்தம் பொருந்தியவள்

() காம = அபிலாஷைகள் - இச்சை

142 # நிஷ்காமா = ஆசைகளின் பிடிகளுக்கு அப்பாற்பட்டு விளங்குபவள் - தன்னில் நிறைவு காண்பவள் *

() உபப்லவா = நாசம் - பேரழிவு

143 # நிருபப்லவா = அழிவற்ற தன்மையுடையவள்

() முக்தா = விடுதலை - சுதந்திரம்

144 # நித்யமுக்தா = சாஸ்வத நிலைபேறுடைய முக்தியில் (உலக இச்சை ஆசாபாசங்களினின்று ) நிலைத்து நிற்பவள்

() விகார = வடிவம், தன்மை இயல்பு முதலியவற்றின் மாறுதல்

145 # நிர்விகாரா = பேதமற்றவள் - மாறுதலுக்கு உட்படாதவள்

() ப்ரபஞ்ச = விஸ்தரிப்பு - விரிவாக்கம் - அவதரிப்பு - உருவாக்கம்

146 # நிஷ்ப்ரபஞ்சா = ப்ரபஞ்ச தோற்ற-விரிவுக்கு அப்பாற்பட்டு விளங்குபவள் (அதனை தன் வசம் வைத்துள்ளவள் என்று புரிந்து கொள்ளலாம்)

() அஷ்ரய = சார்பு நிலை - சார்ந்திருத்தல் - ஆதாரமான

147 # நிராஷ்ரயா = சுயம்புவானவள் - எதனையும் சாராதிருப்பவள் - சுவாதீனமானவள்

() ஷுத்த = நிர்மலமான - சுத்தமான

148 # நித்யசுத்தா = என்றென்றும் அப்பழுக்கற்று விளங்குபவள்

() புத்தா = ஞானம் - அறிவு

149 # நித்யபுத்தா = நிரந்தர ஞானி = அறிவாகி நிற்பவள்

() அவத்யா = குறைபாடு - தரம்தாழ்ந்த

150 # நிரவத்யா = உயர்வானவள் ; மேம்பட்டவள் ; முழுமையானவள்

() அந்தரா = பிரிவு - பிரிவுக்குட்பட்ட - காலகதிக்கு உட்பட்ட - கால இடைவெளிக்கு உட்பட்ட

151 # நிரந்தரா = எங்கும் நிறைந்திருப்பவள்

குறிப்பு: நிஷ்காமா, நித்யசுத்தா, நிரவத்யா முதலிய பல பெயர்களின் அடிப்படை அர்த்தங்கள் , ஆழ்ந்த கருத்துக்கள் மனித புரிதலுக்கு அப்பாற்பட்டவை.  அன்னையானவள் ஆசைகளுக்கும் பாசங்களுக்கும் கட்டுப்படாதும் அதன் தன்மைகளை சாராதும் தனித்திருப்பவள் . சுத்தம்-அசுத்தம் போன்ற இரட்டைகளுகளுக்கு எட்டாது விளங்குபவள் . நேர கால கதிகளின் ஓட்டத்துக்கு அப்பால் திகழ்பவள். அவள்  தனித்துவத்தை, இயல்பை சில பெயர்களில் அடக்கி விட சாத்தியமற்றது. அம்பிகையின் பூரணத்துவத்தை எவ்வித சார்பு நிலையுடனும் ஒப்பிட்டுப் பார்க்க இயலாது. அவள் தாங்கும் நுண்மைத் தன்மையை எப்பெயர்களிலும், வார்த்தைகளிலும் வர்ணித்திட இயலாது.


(தொடர்வோம்) 



Lalitha Sahasranama (141 - 151 )


NirguNa upasana



Shantha;
Nishkaama;
Nirupaplavaa;
Nithya Muktha;
Nir-vikaara;
Nishprapancha;
Niraashrayaa;
Nithya-Shuddha;
Nithya Buddha;
Niravadhya;
Nirantharaa;


141 # Shantha = She who is serene-tranquil

() Kaama = desire

142 # Nishkaama = Who is beyond desires - who is fulfilled or contained in herself *

() upaplava = devastation - calamity

143 # Nir-upaplava = She who is indestructible

() Muktha = free - liberated

144 # Nithyamuktha = She who is ever liberated from worldly ways

() Vikaar = To change form structure or nature

145 # NirVikaara = Who is constant and consistent (un varying)

() Prapancha = expansion-manifestation

146 # Nishprapancha = Who is beyond manifestation or creation of universe i.e. who is the very root cause

() ashraya = base- dependance- parent

147 # Nir-ashraya = Who is not resting on anything - independant

() Shuddha = pure - clean

148 # NithyaShuddha = Who is eternal purity

() Buddha = enlightened

149 # NithyaBuddha = The ever enlightened - embodiment of gyaan

() avadhya = imperfect - inferior (with defects)

150 # Niravadhya = Who is exemplary - flawless

() antara = division, interval space or timegap

151 # Nirantharaa = Who is all-pervading

Note: It might help to understand that, Names like Nishkaama, Nithyashudha, niravadhya etc talks about her attributes which are beyond human nature to comprehend. She is beyond desire, beyond dualities like 'impurity-purity',  beyond perfection, beyond time. She is "absolute" and will not be compared to any relative terms. She cannot be completely described in even in thousand Names. Some abstract attributes of hers cannot be contained in any words or names.


No comments:

Post a Comment