November 20, 2017

Lalitha Sahasranama (90 - 96) தமிழ் விளக்கத்துடன்


லலிதா சஹஸ்ர நாமம் ( 90 - 96)



மந்திர ரூபம் (தொடர்ச்சி)

குலாம்ருதைக ரசிகா;
குல சங்கேத பாலினி;
குலாங்கனா;
குலாந்த:ஸ்தா;
கௌலினி;
குல யோகினி;
அகுலா;

() குல- அம்ருத = சஹஸ்ரத்திலிருந்து பெருகும் அம்ருதம் 
அம்ருதைக = அம்ருதத்திலிருந்து
ரசிகா = விருப்பமுள்ளவள்

# 90 குலாம்ருதைக ரசிகா = சஹஸ்ரத்திலிருந்து பெருகும் 'குல' என்ற அம்ருதத்தில் விருப்பமுள்ளவள் . (சஹஸ்ர சக்ரம் என்பது ஆயிரம் தாமரை இதழ்கள் கொண்டு உச்சந்தலையில் இடம்பெற்றுள்ளது) 

() குல =   இவ்விடத்தில் 'குல' என்பது பரம்பரை  அல்லது குலத்தை குறிக்கும்
சங்கேத = அவளை அடைவதற்கான பாதைகள் - வழிமுறைகள்
பாலன் = பாதுகாப்பவள்

# 91 குல சங்கேத பாலினி  = தன்னை(மஹாஷக்தி)  அடைவதற்கான பாதையையும் வழிமுறைகளையும் மிகுந்த கவனத்துடன் பாதுகாப்பவள் 
(வழிபாட்டு நெறிமுறைகள் உயர்ந்த மஹான்களுக்கும்  ஞானிகளுக்கும் மட்டுமே புலப்படுபவையாக வைத்திருப்பவள் ) 

() குல = குலம்
ஆங்கனா = பெண்மணி 

# 92 குலாங்கனா = குலத்திற்கு பெருமை சேர்கும் உயர்ந்த பதிவ்ரதை

() குல = குலம் - குலம் என்பது இங்கு வேத-சாஸ்திரங்களையும் குறிக்கலாம்
அந்த:ஸ்தா = உள் உறைபவள் 

# 93 குலாந்த:ஸ்தா = சர்வ வியாபி - அனைத்திலும் உள்ளுறைபவள் - அனைத்து வித்யைகளிலும் உள் உறைபவாள் 


() கௌலினி = கௌலினி யோக முறைகள்

# 94 கௌலினி = கௌலினி  வழிபாட்டு முறைகளின் சாராம்ஸமானவாள் 

() குல = பரமாத்மாவிடம் மனம் ஒன்றுபடும் தன்மை
யோகினி = யோக வழி நடப்பவள் 

# 95 குலயோகினி = யோகத்தின்  மூல வடிவானவள்


# 96  அகுலா = குலத்திற்கு அப்பாற்பட்டவள் - அனாதியானவள்  (முடிவும் தொடக்கமும் இல்லாதவள்) - வேத சாஸ்திரத்திற்கு அப்பாற்பட்டவள்   (குலம் என்பது சாஸ்திரத்தை குறிப்பதாக கொண்டால்) *   


குறிப்பு: குல அம்ருதத்தை விரும்புபவளே, குலசங்கேதத்தை பாலிப்பவளாகவும் விளங்கு இறுதியில் குலத்திற்கு அப்பாற்பட்டவளாகவும் வெளிப்படுத்துகிறாள். 

" எல்லாமுமான, எதுவுமற்ற  பரப்ரஹ்மம் " என்ற உபனிஷத் அர்த்தங்களை பிரதிபலிக்கின்றன. 

**


Lalitha Sahasranama (90 - 96)

Mantra Roopam


Kulamruthaika Rasika;
Kula sanketha paalini;
Kulaangana;
Kulaanthahstha;
Kaulini;
Kula yogini;
Akula;


() kula-amrutha = nector (of immortality flowing from sahasra)
amruthaika = belong to the nector 
rasika = fond of - having a liking

# 90 kulaamruthaika Rasika = Who cherishes the nector of immortality flowing from sahasra (Sahasra chakra-thousand petalled lotus located on top of the head) 

() kula = here 'kula' is learnt to mean 'CLAN or race'
sankEtha = whereabouts
paalan = to guard 

# 91 kula sankEtha paalini = She who guards the  path of journey towards her(her clan) 
( i.e whose mantras, rituals and ways to reach her abode or her divine self is known only to the deserving few )

() kula = race or clan or family
aangana = a female

# 92 kulaangana = She who is the pride of her glorious clan. (pure or chaste woman) 

() kula  = clan or community - also refers to scriptures
anthaHstha = to reside in -  to be in midst of

# 93 Kulaanthahstha - She who is present everywhere, - Who is present in every level of knowledge.. ie who is omnipresent 

(this name has to be interpreted as kula = clan or community . Since divine mother's community or clan is the entire prapancha or universe she resides in every atom, or she is omnipresent) 

() kaulini = refers to kaula yoga practices

# 94 kaulini = Who is the essence  of kaula yoga practices

() kula = kula here refers to one-ness of mind in paramatma (in sahasra) 
yogini = One who is in union with Paramathma 

# 95 kulayogini = She who is the quintessence of yogic principles

() Akula = Having no family - beyond knowledge (kula yoga or any practices)

# 96 Akula  = She who is  wihtout origin - beyond any knowledge  * 

Note: It is interesting to note, Mother who cherishes Kula nector, goes on to protect and guard disciplines to reach her abode and finally reveals herself as one who is beyond clan or even scriptures. 

"That which is everything - that which is nothing" is the right understanding of prabrahma - says upanishad.


No comments:

Post a Comment